Festivals

சாமித்தோப்பில் தினமுமே திருவிழா போன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வருடம் ஒன்றுக்கு மூன்று முறை தேர் திருவிழா நடைபெறுகின்றது. திருஏடுவாசிப்பு வருடத்தில் ஒரு முறை தொடர்ந்து பதினேழு நாட்கள் நடைபெறுகின்றது.

தினப் பூஜைகள்

பணிவிடை விடியற்காலை துவங்குகின்றது. காலை மூன்று மணிக்கு ஆலயத்தில் உள்ள குருமார்களும் மற்றவர்களும் எழுந்து முத்துக்கிணற்றில் குளித்தப் பின் ஆலயத்திற்கு வந்து பணிவிடை செய்கின்றனர். குருமார் உகப்படிப்பு படிக்க, சுற்றி இருப்பவர்கள் அதை திரும்பச் சொல்கின்றனர். அதன் பின் கருவறை திறக்கப்படுகின்றது. அந்த நேரத்தில் பன்னிரண்டுக்கும் அதிகமான ஆலய மணிகள் ஒலி எழப்ப சங்கு ஊதுதலும் நடைபெறுகின்றதை காண்பதே மனதுக்கு மகிழ்வாக இருக்கும். அடுத்து வாகன பவனி நடைபெறுகின்றது.

ஆலயத்தை சுற்றி நான்கு தேர் வீதிகளிலும் வாகனப் பவனி நடைபெறுகின்றது. சாமித்தோப்பில் அய்யா வசித்து இருந்த பொழுது அவர் உண்ட உணவான நிதியப்பல் தவறாமல் தயாரிக்கப்பட்டு, அது நேவித்தியமாக படைக்கப்படுகின்றது. குருகுலத்தின் முதன்மை குருவான புதுக்குட்டி அவர்கள் அதை தயாரிக்கின்றார். தவனிப்பல் என்ற பிரசாதம் மற்றவர்களுக்குத் தரப்படுகின்றது.

காலை பதினோறு மணிக்கு நண்பகல் பணிவிடை நடக்க , உச்சிப்படிப்பு படிக்கப்படுகின்றது. உச்சிப் படிப்பு படிக்கப்பட சுற்றி இருப்பவர்கள் அதை திரும்பச் சொல்கின்றனர். அப்பொழுது தவனிப்பல் பிரசாதமும் வினியோகிக்கப்படுகின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும் திரளான மக்கள் அதில் கலந்து கொள்ளுகின்றனர். மாலை ஐந்து மணிக்கு பணிவிடை நடக்க கருவறை திறக்கப்படுகின்றது. குரு உகப்படிப்பு படிக்க சுற்றி இருப்பவர்கள் அதை திரும்பச் சொல்கின்றனர். அடுத்து வாகன பணிவிடை நடைபெறுகின்றது. வாகனப் பவனி ஆலயத்தை சுற்றி நான்கு தேர் வீதிகளிலும் நடைபெறுகின்றது. அதன் பின் அன்னதானம் நடைபெறுகின்றது. இவை ஆலயத்தில் தினமும் நடக்கும் நிகழ்ச்சிகள். எப்பொழுது வேண்டுமானாலும் ஆலயத்திற்குச் சென்று தரிசனம் பெறலாம்.

தேர் திருவிழா

ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் வருடத்தில் மூம்முறை தேர் திருவிழா நடைபெறுகின்றது. ஆவணி மற்றும் தை மாத முதல் வெள்ளிக் கிழமையிலும் வைகாசியில் இரண்டாவது வெள்ளிக் கிழமையும் தேர் திருவிழா நடைபெறுகின்றது. விடியற்காலை கொடிக் கம்பத்தில் காவி நிற கொடி ஏற்றப்பட்ட திருவிழா துவங்குகின்றது. மாலை அய்யாவை சுமந்து செல்லும் பல்லக்கு வாகனப் பவனி ஆலயத்தை சுற்றி நான்கு தேர் வீதிகளிலும் பவனியாக எடுத்தச் செல்லப்படுகின்றது. இரண்டாம் நாள் ஆங்கிலேய பாணியில் தயாரிக்கப்பட்ட பல்லக்கில் அய்யாவை அமர வைத்து ஆலயத்தை சுற்றி நான்கு தேர் வீதிகளிலும் ஊர்வலம் செல்கின்றது. மூன்றாம் நாள் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகன பவனியும், நான்காம் நாள் சாபரம் எனப்படும் பவனியும், ஐந்தாம் நாள் இன்னொரு பச்சை நிற சாபர பவனியும், ஆறாம் நாள் நாக வாகன பவனியும், ஏழாவது நாள் சிவப்பு வண்ண கருட வாகன பவனியும் நடைபெறுகின்றன. அய்யா வழி தொண்டர்கள் அந்தப் பண்டிகையின் பொழுது கிராமம் கிராமமாகச் சென்று அரிசி தானம் பெற்று வருகின்றனர். அதை அவர்கள் அன்ன தானத்துக்கும் மற்ற நாட்களின் தேவைக்கும் பயன் படுத்துகின்றனர்.

எட்டாவது நாள் வைபவம் மிகவும் முக்கியமானது. அன்று அய்யாவை குதிரை வாகனத்தில் வைத்து அனைத்து வீதிகளிலும் உலா வருகின்றனர். அதன் பின் அந்த பவனி முத்துக் கிணற்றை அடைய அங்கு வில் அம்பு கொண்டு கலியை அவர் அழிக்கும் சம்பிரதாய விழா நடைபெற்று முடிந்ததும் அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து மக்கள் அருந்துகின்றனர். அதன் பிறகு சாஸ்தான்கோவிலில்வில்லை, தெரிவில்லை, செட்டிவில்லா, காமராஜபுரம் போன்ற கிராமங்களுக்கு அய்யா ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றார். அந்த விழாவில் அய்யாவிற்கு மக்கள் காணிக்கை என்ற பெயரில் சுருள் கொடுக்கின்றனர். அதன் பின்னர் வடக்கு வாசல் வீதியை ஊர்வலம் வந்தடைந்ததும் அன்ன தானம் நடைபெறுகின்றது.

ஓன்பதாவது நாளன்று அய்யா அனுமார் வாகனத்திலும், பத்தாவது நாள் மிகக் கனமான இந்திர வாகனத்திலும் பவனி வருகின்றார். அந்த வாகனத்திற்கு நடு இரவில் பணிவிடை செய்யப்படுகின்றது. சிறிய தேர் போல இருக்கும் அந்த வாகன பவனி மிக முக்கியமானது. ஞாயிற்றுக் கிழமையில் வரும்; பத்தாவது நாள் வைபவத்தில் படித்தவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என்ற எந்த பேதமும் இன்றி பலரும் வாகனத்தை தூக்கப் போட்டிப் போட்டுக் கொண்டு வருகின்றனர். பதினோராம் நாள் தேர் பவனி நண்பகல் 12 மணிக்குத் துவங்குகின்றது. மாலை ஐந்து மணிக்கு முடிவடையும் அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

திரு ஏடு வாசிப்பு

கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் தொடர்ந்து பதினேழு நாட்கள் திரு ஏடு வாசிக்கப்படுகின்றது. அந்த விழாவில் மாலை 4.30 முதல் 9.30 வரை தினமும் அகிலத்திரட்டு புனித நூலும் வாசிக்கப்படுகின்றது. அகிலத்திரட்டு நூலில் உள்ளதை ஒரு அறிஞர் விளக்கிக் கூறுவார். கடைசி நாள் பட்டாபிஷேகம் என்று கூறப்பட்டு அன்று ஏடு வாசிப்பு நடைபெறும்.

வைகுண்டர் பிறந்த நாள் – மாசி மாதப் பவனி

மாசி மாதம் இருபதாம் தேதி வைகுண்டருடைய பிறந்த நாள் விழா விமர்ச்சையாகக் கொண்டாடப்படுகின்றது. திருவனந்தபுரத்தில் அய்யா விடுதலை செய்யப்பட்டதை குறிக்கும் விதத்திலும் மற்றும் திருச்செந்தூரில் இருந்தும் ஊர்வலம் புறப்பட்டு இங்கு வருகின்றன. மாசி மாதம் பத்தொன்பதாம் தேதி அன்று சென்னை, கன்யாகுமரி, நெல்லைக் கட்டபொம்மன், வாவுசி மாவட்டம்,தேனி, வத்தலகுண்டு போன்ற இடங்களில் இருந்து பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள வருகின்றனர். சாமித்தோப்பு குரு தலைமையில் காலை எட்டு மணிக்கு கடலுக்குச் சென்று அதில் குளிக்கின்றனர். குரு அனைவருடைய நெற்றியிலும் நாமம் அணிவிக்க ஊர்வலம் அங்கிருந்து புறப்படும். அவர்கள் அய்யா சிவ சிவா அரகரா அரகரா என கோஷம் இட்டபடி வந்து கொண்டிருக்க ஐம்பதுக்கும் குறைவின்றி வாகனங்கள் அந்த ஊர்வலத்தின் பின்னால் வருகின்றது. ஊர்வலம் சீர்கட்சி, நைநான்பாத்து , உடன்குடி, செட்டியர்பட்டு , தேயூர், கோட்டன்காடு , முத்துகிருஷ்ணபுரம், பாதுகாபட்டு , தட்டான் மடம், திசையன்விளை போன்ற இடங்கள் வழியாக எருமைக் குளத்திற்கு நண்பகலில் போய் சேரும். அங்கு அன்னதானம் முடிந்தப் பின் அது மீண்டும் புறப்பட்டு ஆயான் குளம், கரைச்சுத்தப்புதூர், கூடான் குளம், செட்டிக் குளம், ஆவரைப்புரம், அம்பலவாணன்புரம், அ10ரல்வாய்மொழி, தோவளை, போன்ற இடங்கள் வழியாக ஆதலவி;ளையை சென்றடையும்.

அதே சமயத்தில் கேரள மக்கள் மற்றும் பலரும் பங்கேற்கும் ஊர்வலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு பலராமபுரா, பாரசாலா, களியாக்கவிளை, மார்த்தாண்டம், தக்கலை போன்ற இடங்கள் வழியாக ஆதலவி;ளையை சென்றடையும். ஆதலவி;ளையில் உள்ள மலையில் வைகுண்ட ஜோதி ஏற்றப்பட ஊர்வலம் மீண்டும் புறப்பட்டு நாகர்கோவில் சென்றடந்ததும் அந்த ஊரில் நகர ஊர்வலத்தை நடத்தும். இரவு அந்த ஊரில் தங்கியப் பின் மறு நாள் விடியற் காலை மீண்டும் ஊர்வலம் துவங்கும். அந்த ஊர்வலத்திற்கு சாமித்தோப்பு குருமார் தலைமைத் தாங்குவார்.

இருபதாயிரத்திற்கும் மேல் பங்கேற்கும் அந்த ஊர்வலத்தினர் அய்யா சிவ சிவா அரகரா அரகரா என கோஷம் எழுப்பியவாறு நடக்கின்றனர். கைகளில் காவிக் கொடி ஏந்தியபடி நடக்கும் அந்த ஊர்வலத்தில் யானை மற்றும் குதிரைகளும் அணி வகுத்து வரும். இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கான் பாறை, ஏத்தன் காடு மற்றும் வடக்கு தாமரைக் குளம் வழியாக சுமார் பன்னிரண்டு மணி அளவில் சாமித்தோப்பை ஊர்வலம் சென்றடைந்து முத்திரி கிணறு, நாலு வீதிகள் என அனைத்து இடங்களுக்கும் செல்லும் ஊர்வலம் இறுதியாக ஆலயத்தைச் சென்றடைந்ததும் கொடிகளை ஆலயத்தில் கொடுத்து விடுகின்றனர். அதன் பினனர்; வாகனப் பணிவிடை, அன்னதானம் போன்றவை நடைபெறுகின்றன. சிறுவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இரவில் நடைபெறும். தமிழ்நாடு, கேரளா போன்ற இடங்களில் இருந்து பிரபலமான மனிதர்கள் வந்து. விழாவில் பங்கேற்கின்றனர். முன்பு அய்யா பாலகிருஷ்ண நாடார் மற்றும் கிருஷ்ணநாமமணி நாடார் போன்றவர்கள் விழா மலர் வெளியிட்டனர். அந்தப் பழக்கம் தற்பொழுது நின்று விட்டது.

– நன்றி சாந்திப்பிரியா

Close Bitnami banner
Bitnami